சனி, 12 டிசம்பர், 2009

கவலைக்கு மருந்து ரஜினி படம்


அன்பார்ந்த வலைபக்க நண்பர்களுக்கு வணக்கம்
இன்று ரஜினியின் 60வது பிறந்த நாள்
எனதருமை   தலைவருக்கு இதயம் கனிந்த பிறந்த நாள் வாழ்த்துக்கள்

நான் ரஜினியை அறிந்த படம் அடுத்த வாரிசு மூலம் தான் அன்றிலிருந்து இன்று வரை இனிமேலும் அவர் ரசிகன் தான். ஆசை நூறு வகை வாழ்வில் நூறு சுவை இந்த பாடல் என்னை மயக்கியது அவரது ஸ்டைல் மற்றும் மேனரிசம் அனைத்தும் என்னை தாக்கியது.
ஒன்று புரிந்தது அவர் படம் பார்த்தாலே புது ரத்தம் என் உடலினுள் புகுவதை உணரமுடிந்தது.

எனக்குள் தினமும் புது ரத்தம் பாய்ச்சி கொண்டிருக்கும் ரஜினிக்கு என் அன்பான வணக்கங்கள் நன்றிகள்.
இது திரையில்.

ஆன்மீகத்தில் இமயமலை காணும் ஆவலை என் போன்ற ரசிகர்கள் மனதில் உருவாkkiயுள்ளர்  கண்டிப்பாக அது நெறைவேரனும்

கவலைக்கு மருந்து ரஜினி படம்
சந்தோசத்தின் போதை ரஜினி படம்
வாழ்கையின் நெறிகளுக்கு ரஜினி படம்
தன்னம்பிக்கைக்கு ரஜினி படம்
உழைத்து வெற்றிபெற அவர் வாழ்க்கை
என்று ரோல் மாடலாக  வாழ்ந்துகொண்டு இருக்கிறார் நம் தலைவர்

இவ்வளவு சந்தோசத்தையும் தன்னம்பிக்கையும் கொடுத்தவரை அரசியலுக்கு வா என்று நாம் தொல்லை கொடுக்கலாமா யோசியுங்கள்

முதலில்  நமக்காக சினிமா
பின்பு அவர்க்காக ஆன்மிகம்
வழிவிடுங்கள் வற்புறுத்தாதீர்கள்
நம் தலைவரை
வாழ்க்கை உன் கையில் என்று சொன்னவர்க்கு தெரியாத
அரசியலுக்கு வரனுமா வேண்டாமா என்று

இது பற்றி உங்கள் கருத்துகளை எதிபார்க்கும் ரஜினி ரசிகன்

கருத்துகள் இல்லை: