வியாழன், 17 ஜூன், 2010

இவ்வளவு மின்சாரத்தை எங்கே பதுக்கி வைத்திருக்கிறாய்

இவ்வளவு மின்சாரத்தை
எங்கே பதுக்கி வைத்திருக்கிறாய்

உன் கையை பற்றும்போது 220 வோல்ட்
உன்னை முத்தமிடுகையில் 1000 வோல்ட்
...
தொட்டவுடன் என்
பேட்டரி ஃபுல்

 

 

கண்களுக்கு
உணவில்லாத போது
காதுக்கு
தேன்

...அலைபேசியில்
உன்
குரல்

 

 

என்
உடலில்
உன்
பிம்பங்கள்
என் மீது
...நீர் திவலைகள்

 

 

செவ்வாய், 23 மார்ச், 2010

ப்ரீத்தி ஜிந்தா + யுவராஜ் சிங் = 35+28 = ?

பஞ்சாப்  கிங்க்ஸ் அணி தலைவி  ப்ரீத்தி ஜிந்தா,  யுவராஜ் சிங் எனக்கு தம்பி மாதிரி என்று அதிரடியாக கூறியுள்ளார். இனி ஆட்டம் க்ளோஸ் .

இந்திய கிரிக்கெட் அணியின் 'மன்மதன்' என வர்ணிக்கப்படுபவர்யுவராஜ். இவரது வலையில் கிம் சர்மா முதல் தீபிகா படுகோனே வரை, நிறைய பாலிவுட் நட்சத்திரங்கள் சிக்கியுள்ளனர். இந்த முறை ஐ.பி.எல்., கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் கேப்டன்பதவியில் இருந்து நீக்கப் பட்டார். பின் புதிய கேப்டனாக சங்ககரா நியமிக்கப் பட்டார். இதனால் அதிருப்தியடைந்த யுவராஜ் கூறுகையில்,''அணியின் முக்கிய கேப்டன் பிரித்தி ஜிந்தா தான். கிரிக்கெட் தொடர்பாக நிறைய கற்றுக் கொண்டுள்ளார். ஒரு குடும்பம் போல அணியை பார்த்துக் கொள்கிறார். வீரர்களுக்கு சிறந்த உணவு, மற்றும் உரிய பாதுகாப்பு கிடைப்பதை உறுதி செய்கிறார். அனைவரும் சகோதரியாக பார்த்தாலும், நான் மட்டும் அப்படி நினைக்கவில்லை,'' என, நகைச்சுவையாக குறிப்பிட்டார்.

இதையடுத்து யுவராஜ்(28)-பிரித்தி ஜிந்தா(35) தொடர்பாக அதிகம்கிசுகிசுக்கப்பட்டது. இருவரும் மிகவும் நெருக்கமாகபழகுவதாக கூறப்பட்டது. இதனை கேட்ட பிரித்தி ஆவேசமடைந்தார்.

இத்தொடரின் முதல் மூன்று போட்டிகளில் பஞ்சாப் அணி தோல்வி அடைய, 'கட்டிப்புடி வைத்தியத்தை' கைவிட்ட இவர் கூறுகையில்,''தப்பா பேசாதீங்க ப்ளீஸ்... யுவராஜ் எனக்கு தம்பி மாதிரி. பஞ்சாப் அணி எனது குடும்பம் போன்றது. நாங்கள் அனைத்து விஷயங்களையும் பகிர்ந்து கொள்கிறோம். அவ்வளவு தான்,''என்றார்.

செவ்வாய், 15 டிசம்பர், 2009

சாரு நிவேதாவின் தனிமையும் கொண்டாட்டமும்


சாரு  நிவேதாவின்  தனிமையும்  கொண்டாட்டமும்
www.charuonline.com
1. அடியேனின் புத்தம் புதிய சிறுகதை ஒன்று டெஹல்கா சிறப்பிதழில் வெளியாகிறது.   குறிப்பிட்ட டெஹல்கா இதழ் ஜனவரி முதல் தேதி கடைகளில் கிடைக்கும்.   இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு எழுதிய சிறுகதை. கொஞ்சம் காதல் , ஒரே ஒரு வாக்கியத்தில் மட்டும் செக்ஸ் , போரின் அவலங்கள் எல்லாம் கதையில் உண்டு.   நான் - லீனியர் பாணியில் எழுதிய சிறுகதை.   வாங்கிப் படியுங்கள்.   காப்பிரைட் பிரச்சினைகளால்கதையை நமது இணைய தளத்தில் பதிவேற்றம் செய்ய இயலாது.   
2. டிசம்பர் 18- ஆம் தேதி எனக்குப் பிறந்த நாள்.   எப்போதும் அந்த நாளில் கோவிலுக்குப் போவேன்.   ஆனால் இப்போது எப்போதும் கோவிலுக்குச் செல்லும் ஆளாக மாறி விட்டதால் 18- ஆம் தேதி ஏதாவது ஒரு பாருக்குச் செல்லலாம் என்று   திட்டமிட்டிருக்கிறேன்.    தயவு செய்து என்   தொலைபேசி எண்ணுக்கு யாரும் பிறந்த நாள் வாழ்த்தை குறுஞ்செய்தியாக அனுப்ப வேண்டாம்.   ஏனென்றால் ,  தீபாவளி அன்று முழுநாளும் வெறும்   ஓட்ஸ் கஞ்சியை மட்டுமே குடித்தபடி பட்டினியாய்க் கிடந்தேன்.   அவந்திகா   அந்தச் சமயத்தில் ஒரு இரண்டு வாரகாலம்   ஆசிரம வேலையில் மூழ்கியிருந்தாள்.    வீட்டில் நான் மட்டும் ஸோரோ , பப்புவோடு மாட்டிக் கொண்டேன்.   சமைக்க மனம் இல்லை.   சமைத்துக் கொடுக்க ஆள் இல்லை. வெளியே எந்த உணவு விடுதியும் இல்லை.   150 நண்பர்கள்   தீபாவளி வாழ்த்தை குறுஞ்செய்தியாக அனுப்பியிருந்தார்கள்.    ஆனால் ஒருத்தருக்குக் கூட வடை , முறுக்கு , அதிரசம் , பொருளங்காய் உருண்டை என்று   தீபாவளி பட்சணம் அனுப்பத்   தோன்றவில்லை.   பிறகு நானாகவே லஜ்ஜையை விட்டு ஹமீதிடம் கேட்டேன்.   மட்டன் பிரியாணி அனுப்பி வைக்கட்டுமா என்று கேட்டார்.   எனக்கு மட்டன் பிரியாணி பிடிக்கும் என்றாலும் அன்றைய   தினம் முறுக்கு , அதிரசம் , சுழியம் போன்ற   தீபாவளிக்கே உரிய பிரத்தியேகமான பட்சணங்களையே சாப்பிட விரும்பினேன்.    ஆனால் மதியமும்   ஓட்ஸ் கஞ்சியையே குடித்த போது மட்டன் பிரியாணியையாவது அனுப்பச் சொல்லியிருக்கலாமே என்று   தோன்றியது.  
பிறகு நிக்கி போன் செய்து பட்சணம் கொடுத்து அனுப்புகிறேன் என்றான். பட்சணமும் வந்தது. ஆனால் என் துரதிர்ஷ்டம், அவன் வீட்டில் தீபாவளி அன்று அல்வா தான் செய்வார்களாம். ஒரு ஏழெட்டு கிலோ அனுப்பியிருந்தான். எனக்கு அல்வா பிடிக்கும்தான். ஆனால், தீபாவளி நாள் அன்று முறுக்கு, அதிரசம், சுழியம் எதுவும் சாப்பிடாமல் அல்வா சாப்பிடுவதும், ஹமீது வீட்டிலிருந்து பிரியாணி சாப்பிடுவதும் ஒன்றுதான் என்று தோன்றியது.
ஸீரோ டிகிரியில் சொற்களைப் பற்றிய ஒரு கவிதை உண்டு. பசிக்கு சொற்களைத் தின்ன முடியுமா? காமத்தை சொற்களால் தீர்க்க முடியுமா? தனிமையை சொற்களால் கடந்து போக முடியுமா?
டிசம்பர் 12-ஆம் தேதி புத்தக வெளியீட்டு விழா முடிந்த பின், ஒரு ஓட்டலில் மதுபான விருந்து. ஐம்பது பேர் இருப்பார்கள். எல்லோருமே என்னுடைய மிக நெருங்கிய நண்பர்கள். ஆனால் நான் மட்டும் ஒரு இடத்தில் தனியாக அமர்ந்து குடித்துக் கொண்டிருந்தேன். எனக்குப் பிரியமான ஃப்ரெஞ்ச் ஒய்ன் வரவில்லை. ரிவேரா ஒய்னும் இல்லை. வேறு ஏதோ ஒரு மட்டமான ஒய்ன் என்பதால் பிராந்தி குடித்தேன். எந்த இடம் திரும்பினாலும் ஐந்தாறு பேர் சிறு சிறு குழுக்களாகப் பிரிந்து நின்று, அமர்ந்து, பேசிக் கொண்டு, சிரித்துக் கொண்டு குடித்துக் கொண்டிருந்தார்கள். நான் மட்டும் தனியாக அமர்ந்திருந்தேன். அந்த 50 பேரில் என்னோடு பேச ஒரு ஆள் கூட இல்லை. நானா எழுந்து போய் ‘என்னோடு பேச ஆள் இல்லை; யாராவது வாருங்கள் ’ என்று அழைக்க முடியும்? நர்சிம் பேசியிருப்பார். அவர் எல்லோரையும் உபசரித்துக் கொண்டிருந்தார்.
ரொம்ப நேரம் தனியாகவே அமர்ந்திருந்தேன். பிறகுதான் ஷாஜியும், எஸ்.ராமகிருஷ்ணனும் வந்தார்கள். எஸ்.ரா. எனக்கு எதிரே அமர்ந்து அப்பளத்தை சாப்பிட்டபடி என்னோடு பேசத் துவங்கினார். (அவர் குடிக்க மாட்டார் என்பதால் அப்பளம்). பிறகு சிறிது நேரத்தில் அவரோடும் பேசுவதற்கு ஒரு குழு வந்து விட்டது. ஷாஜி கொஞ்சம் என்னைக் காப்பாற்றினார்.
தமிழகமே கொண்டாடிய ஒரு நடிகை, தான் மிக மிகத் தனிமையை உணர்வதாக ரொம்ப வருஷங்களுக்கு முன் கூறியது ஞாபகம் வந்தது.
வ்வ்வ் .ஆறூஓண்ளீணே .கம 

சனி, 12 டிசம்பர், 2009

கவலைக்கு மருந்து ரஜினி படம்


அன்பார்ந்த வலைபக்க நண்பர்களுக்கு வணக்கம்
இன்று ரஜினியின் 60வது பிறந்த நாள்
எனதருமை   தலைவருக்கு இதயம் கனிந்த பிறந்த நாள் வாழ்த்துக்கள்

நான் ரஜினியை அறிந்த படம் அடுத்த வாரிசு மூலம் தான் அன்றிலிருந்து இன்று வரை இனிமேலும் அவர் ரசிகன் தான். ஆசை நூறு வகை வாழ்வில் நூறு சுவை இந்த பாடல் என்னை மயக்கியது அவரது ஸ்டைல் மற்றும் மேனரிசம் அனைத்தும் என்னை தாக்கியது.
ஒன்று புரிந்தது அவர் படம் பார்த்தாலே புது ரத்தம் என் உடலினுள் புகுவதை உணரமுடிந்தது.

எனக்குள் தினமும் புது ரத்தம் பாய்ச்சி கொண்டிருக்கும் ரஜினிக்கு என் அன்பான வணக்கங்கள் நன்றிகள்.
இது திரையில்.

ஆன்மீகத்தில் இமயமலை காணும் ஆவலை என் போன்ற ரசிகர்கள் மனதில் உருவாkkiயுள்ளர்  கண்டிப்பாக அது நெறைவேரனும்

கவலைக்கு மருந்து ரஜினி படம்
சந்தோசத்தின் போதை ரஜினி படம்
வாழ்கையின் நெறிகளுக்கு ரஜினி படம்
தன்னம்பிக்கைக்கு ரஜினி படம்
உழைத்து வெற்றிபெற அவர் வாழ்க்கை
என்று ரோல் மாடலாக  வாழ்ந்துகொண்டு இருக்கிறார் நம் தலைவர்

இவ்வளவு சந்தோசத்தையும் தன்னம்பிக்கையும் கொடுத்தவரை அரசியலுக்கு வா என்று நாம் தொல்லை கொடுக்கலாமா யோசியுங்கள்

முதலில்  நமக்காக சினிமா
பின்பு அவர்க்காக ஆன்மிகம்
வழிவிடுங்கள் வற்புறுத்தாதீர்கள்
நம் தலைவரை
வாழ்க்கை உன் கையில் என்று சொன்னவர்க்கு தெரியாத
அரசியலுக்கு வரனுமா வேண்டாமா என்று

இது பற்றி உங்கள் கருத்துகளை எதிபார்க்கும் ரஜினி ரசிகன்

சனி, 5 டிசம்பர், 2009

காதலிக்கும் பெண்களே

வெங்காயத்த  உரிச்சா உன் கண்ணில் நீர்
நீ பிரிஞ்சா என் வாயில் பீர்
என் பர்ஸ் காலி
அடுத்த ஆள் கெடைச்சா உனக்கு ஜாலி

அவன் பர்சும் காலி
இதுவே உன் ஜோலி

ஜாலியான ஜோலி உனக்கு
இப்ப நெனைக்கிறேன் நானும் பெண்ணாக பிறந்திருக்கலாம் என்று

வெள்ளி, 26 செப்டம்பர், 2008

இன்னிக்கு.......

இன்னிக்கு நான் பார்த்த படிச்சா ப்லோக் எல்லாம் நல்லா இருந்ச்சு. இப்பத்த நான் இங்க தமிழ் டைப் பண்ணி பழகுற. இனி நீங்க என் ப்லோக் படிக்கலாம். நானும் சாரு கட்சி ஆரம்பிச்ச அவர எதுத்து ச்டடேமேன்ட் விடறதுக்கு இப்பலேர்ந்து ப்லோக் எழுதலாம் நு அவர எதுத்து நான் நின்னு ஜெயிப்பேன்னு இப்பவே சொல்லிகிறேன் வடிவேல் மாதிரி.